Loading...
Sunday 16 February 2014

தேவி ஸ்ரீ பிரசாத்தைப் பாராட்டியுள்ள கமல்ஹாசன்!

இயக்குனர் சசிக்குமார் முதல் முறையாக தனது முரட்டுத் தோற்றத்திலிருந்து மாறுபட்டு நவநாகரீக தோற்றத்தில் நடித்துள்ள
பிரம்மன் திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று சன் டிவியில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் கலந்துகொண்ட உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தை என் உயிரினும் உயிராக என்று பாராட்டியதாகவும், இதனால் தான் மகிழ்ச்சியில் வானத்தில் பறந்து கொண்டிருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.

கே.மஞ்சு சினிமாஸ் மற்றும் ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தினை கமல்ஹாசனின் முன்னாள் உதவி இயக்குனரான சாக்ரடீஸ் இயக்கியுள்ளார். சசிக்குமார் மற்றும் லாவன்யா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயப்பிரகாஷ், சந்தானம், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 21ல் வெளியாகவுள்ளது.

கமல்ஹாசன் பத்து வேடங்களில் தோன்றி நடித்த தசாவதாரம் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையமைத்திருந்தது நினைவுகூறத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP