Loading...
Tuesday 18 February 2014

குத்துப்பாட்டு கேட்கும் சமந்தா!




தமிழ் சினிமாப் பாடல்களைப்பொறுத்தவரை மெலோடி, குத்துப்பாட்டு என எல்லாமே கலந்துதான் இருக்கும். ஆனால், ஆந்திராவில் அப்படியல்ல, கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே குத்துப்பாட்டு போன்று ஒரே மாதிரியான டெம்போவில்தான் இருக்கும். டண்டனக்கா ரேஞ்சுக்கு துள்ளிக்குதித்து பாடல் முழுக்க சளைக்காமல் ஆடித்தீர்ப்பார்கள்.
ஆனபோதும், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருந்து சில மெலோடியான ஹிட் பாடல்களை அங்குள்ள இசையமைப்பாளர்கள் கையாளத் தொடங்கியிருக்கிறார்களாம்.
குறிப்பாக வரிந்து கட்டி ஆட ஆசைப்படும் சமந்தா நடிக்கும் படங்களிலும் இதுபோன்ற மெலோடியான பாடல்கள் இடம்பெறுவது சமந்தாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

அதனால் தன்னை படங்களில ஒப்பந்தம் செய்யும்போது, எனக்கு மெலோடியான பாடல்கள் தர வேண்டாம். நான் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றும் எகிறி குதித்து ஆடக்கூடிய குத்துப்பாடல்களாக இருக்க வேணடும் என்கிறாராம்.
காரணம், என் ரசிகர்கள் என்னை அந்த மாதிரி கோணத்தில்தான் ரசிக்கிறார்கள். நான் நடிக்கிற படங்களின் பாடல் காட்சியில் தியேட்டர்களில் விசில் பறக்க ஆட்டம் போட வேண்டும் என்கிறார்கள்.
அதனால், அவர்களின் ரசனைக்கு தீனி போட வேண்டியது என் கடமையில்லையா? என்று தன் பக்கமுள்ள நியாயத்தை சொல்கிறாராம். அதனால்.
இப்போதெல்லாம் சமந்தாவுக்கென்றே தலைதெறிக்க ஆடக்கூடிய வகையில் படத்துக்கு இரண்டு குத்தாட்ட பாடல்கள் வைப்பதை வழக்கமாகி விட்டனர் ஆந்திரவாலாக்கள்.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP