Loading...
Tuesday 18 February 2014

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி: விஷால் படம் ரிலீஸுக்கு ரெடி!




சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர்.
இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்கி இருக்கிறார். விஜய் ஆன்டனி இசை அமைத்திருக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் பிலிம் தயாரித்துள்ளது. காமெடி ப்ளஸ் ஆக்ஷ்ன் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. விஷால் நடித்து வெளியான பாண்டிய நாடு திரைப்படத்திற்கு முன்பே இந்தப் படம் வரவேண்டியது. ஆனால் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமாக படம் ரிலீஸாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் மதகஜராஜா’ படம் முடிவடைந்து திரைக்கு வராமல் தொடர்ந்து முடங்கிக் கிடந்ததால், அந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் பெரும் முயற்சி செய்தார். இதற்காக, விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி, அந்த பட நிறுவனம் சார்பில் ‘மதகஜராஜா’ படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி, வெளியிட முன்வந்தார். தனது சொந்தப் பணம் பல கோடிகளை இதற்காக செலவழித்தார். அப்படியிருந்தும் அந்த படம் நிதி நெருக்கடியிலிருந்து வெளிவராமல் முடங்கிப் போக, ‘மதகஜராஜா’வை விஷால் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.
கடந்த சில மாதங்களாக இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு மீண்டும் ஈடுபட்டு வந்திருக்கிறது. தற்போது அந்த முயற்சிக்கு வெற்றி கிட்டியுள்ளது. ஒருவழியாக மதகஜராஜா படத்தை அடுத்த மாதம் (மார்ச்) 7-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். விஜய் ஆன்டனி இசையில் விஷால் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP