Loading...
Wednesday 19 February 2014

உதவி இயக்குனரான ஜீவா!


சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல், முன்னதாக நடிப்பு, டைரக்ஷன் என தொழில்நுட்பம் குறித்த பல விசயங்களை படித்த பின்னரே சிலர், நடிகர்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள். நடிப்பு தவிர இதர விசயங்களையும் தெரிந்து கொண்டால் அது நடிப்புக்கு பெரிய உதவியாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்படுகிறபோதும் இயக்குனர் அவதாரமும் எடுக்கலாம் என்ற நோக்கம் இதற்குள் அடங்கியிருக்கிறது.

அந்த வகையில், பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சித்தார்த். அதேப்போல் விஷால் நடிக்க வருவதற்கு முன்பு டைரக்டராக வேண்டும் என்றுதான் அர்ஜூன் இயக்கிய ஏழுமலை உள்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். மேலும், கும்கி படத்தில அறிமுகமான விக்ரம் பிரபு வெளிநாட்டில் டைரக்ஷன் படித்தவர்.

இந்த நிலையில், இதுவரை டைரக்ஷன் துறைக்குள் வராமல் இருந்த ஜீவாவும் இப்போது யான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 

இப்படத்தில் படப்பிடிப்பு மொராக்கோவில் நடைபெற்றபோது உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தானே பேடு, டயலாக் பேப்பரை கையில் எடுத்தவர், சிலருக்கு டயலாக்கூட சொல்லிக்கொடுத்தாராம். மற்ற உதவி இயக்குனர்களுக்கு இணையாக அத்தனை வேலைகளையும் அவர் செய்ததை யான் யூனிட்டே ஆச்சர்யமாக சொல்லிக்கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP