Loading...
Thursday 13 February 2014

மதம் மாறிய விவகாரம்: யுவன் சங்கர் ராஜா டுவிட்டரை விட்டு ஓட்டம்!


ஏ.ஆர். ரகுமானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
இதனை அவரே, இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு ரசிகர்களிடம் இருந்து வந்த ஆதரவை விட கடுமையான எதிர்ப்புதான் அதிகம் வந்துள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு பதில் சொல்ல விரும்பாத யுவன் ஷங்கர் ராஜா, டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது யுவனின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளமான @Raja_Yuvan என்ற டுவிட்டர் கணக்கு பிப்ரவரி 11ம் தேதியோடு இயங்கவில்லை. இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று கடைசியாக டுவிட்டியுள்ளார் யுவன்.
யுவன்ஷங்கர் ராஜா பல வருடங்களாக டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார். அவர் இசையமைக்கும் படங்கள், கலந்து கொள்ள இருக்கும் விழாக்கள் போன்ற விபரங்களை உடனுக்குடன் டுவிட்டரில் பதிவு செய்யும் பழக்கம் உடையவர். இந்நிலையில் மதமாற்றம் பிரச்னை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் யுவன் தற்காலிகமாக டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார். இந்த பிரச்சனை சற்று தணிந்த பிறகே மீண்டும் டுவிட்டருக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP