Loading...
Monday 10 February 2014

நிமிர்ந்து நில்: பைனல் ரவுண்ட் அப்!





டாப் கீயரில் போய்க்கொண்டிருந்த ஜெயம்ரவியின் கேரியருக்கு ஸ்பீட் பிரேக் போட்டது ஆதிபகவன். அமீரை முழுசா நம்பி இரண்டு வருடத்தை அவரிடம் கொடுத்ததில் கழண்டு போனது கேரியர் சக்கரம். பூலோகம் பூமியை விட மெதுவாக சுற்றிக் கொண்டிருப்பதால் ஜெயம்ரவியின் இப்போதைய ஒரே நம்பிக்கை நிமிர்ந்து நில். பாதி பூலோகம் கடந்து கொண்டிருந்தபோதே இது கரைசேர நாளாகும் என்று கருதி சமுத்திரக்கனியை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரே வீச்சில் படத்தை முடித்து விட்டார். நாடோடிகள் படத்துக்கு பிறகு அப்படி ஒரு ஹிட் அமையவில்லை சமுத்திரகனிக்கு, அதன் தெலுங்கு ரீமேக், அடுத்து தமிழில் டைரக்ட் செய்த போராளி. அதன் கன்னட ரீமேக் என எல்லாமே ஆவரேஜ் ரிசல்ட்டையே கொடுத்தது. என்றாலும் சில மலையாளப் படங்கள், சாட்டை ஆகியவை ஒரு நடிகராக அவருக்கு கைகொடுத்தது. எனவே வெற்றி இயக்குனராக நிமிர்ந்து நிற்க சமுத்திரகனிக்கும் இது முக்கியமான படம். வருகிற 14ந் தேதி ரிலீஸ். படம் பற்றிய ஒரு பைனல் ரவுண்ட் அப் பார்த்து விடலாம்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. தெலுங்கு டைட்டில் ஜண்டாபாய் கபிராஜு. ஜெயம்ரவி கேரக்டரில் தெலுங்கில் நடித்திருப்பவர் நானி. ஹீரோயின்கள் அமலாபாலும், ராகிணி திவிதேதியும் இரண்டு மொழியிலும் அதே கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெயம்ரவிக்கு இரட்டை வேடம். ஒரு வேடம் சென்னை இளைஞன் அரவிந்த் சிவசாமி. மற்றொரு வேடம் ஆந்திரத்து நரம்சிம்ம ரெட்டி. அரவிந்த் சிவசாமி போராட்ட குணமிக்க ஐ.டி இளைஞர். நரசிம்ம ரெட்டி 45 வயதை தாண்டிய ஐதராபாத் ஆள். நானி ஐதராபாத் இளைஞராகவும் சென்னை நடுத்தர வயதுக்காரராகவும் நடித்திருக்கிறார். சரத்குமார் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் வரும் 23 நிமிடங்களும் பரபர ஆக்ஷன் பகுதி. நீயா நானா புகழ் கோபிநாத் முதன் முறையாக நடித்திருக்கிறார். டி.வி.நிருபராகவே வருகிறார். மீடியாவின் சக்தியை உணர்த்துமாம் அவரது கேரக்டர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டிருக்கும் சேசிக் காட்சி செம திரிலிங்காக இருக்குமாம். ஒரு கோடி ரூபாய் செலவில் இதனை எடுத்திருக்கிறார்கள். அமலாபால் கிராமத்திலிருந்து சென்னை வந்து குடியேறிய நடுத்தர குடும்பத்து பெண். பெயர் பூமாரி. அவருக்கு டுவின் சிஸ்டர் இருப்பார்கள் அவர்கள் பெயர் தங்க மாரி, செல்ல மாரி, அப்பா பெயர் மாரியப்பன், அம்மா கருமாரி. மொத்தத்துல மாரி குடும்பம்.ராகினி திவிவேதி நரசிம்ம ரெட்டியின் மனைவி. ஜாலியா கலகலன்னு இருக்குற மனைவி.படம் ரிலீசாவதற்கு முன்பே பல பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கைதட்டல்களையும் அள்ளி வந்திருக்கிறது. "நம்மை நாமே சரிப்படுத்திக்கிட்டா உலகம் தன்னால சரியாகிடும்" என்பது படம் சொல்லும் மேசேஜ்.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP