Loading...
Thursday 13 February 2014

காதலர் தினத்தை எதிர்ப்பதா? குஷ்பூ ஆவேசம்!!



காதலர் தினம் வரப்போவதென்றால் வழக்கம்போல், வட மாநிலங்களில் சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதோடு, சிவசேனா கட்சியினர், காதலர்களை கண்டால் விரட்டி விரட்டியடிப்பார்கள். இதையே பெற்றோர்களும் விரும்புகின்றனர். ஆனபோதும், காதலர் தினம் வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விடிய விடிய தூங்காமல் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று களைகட்ட வைத்து விடுகிறார்கள். இதனால் பிப் 14-ந்தேதி வருகிறது என்றால் பெருவாரியான பெற்றோர்கள் அன்றைய தினத்தை பேட் டேவாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் அதையே ஹோப்பி டேயாக கொண்டாடுகிறார்கள் இளவட்டங்கள்.


இந்தநிலையில், அவ்வப்போது ஏதாவது வார்த்தை குண்டுகளை வீசி வரும் குஷ்பூ, தனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, காதலர் தினம் பற்றி கருத்து கேட்டவர்களிடத்தில், ரொம்ப நல்ல விசயம். வரவேற்கிறேன் என்று காதலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துளளார்.

அதேசமயம், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைப்பார்த்து, இதெல்லாம் வேலையில்லாதவர்களின் வேலை என்று கூறியிருக்கிறார். அதோடு, நாட்டில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் நடக்கிறது. குறிப்பாக, கற்பழிப்பு சம்பவங்கள் பெருக்கிக்கொண்டே வருகிறது. அதனால் காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள் நாட்டில் நடக்கும் தவறான விசயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலாவது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP