பாலிவுட் நடிகை பிபாஷா பாசு ஜான் ஆபிரகாமுடன் உறவை முறித்துகொண்ட பின்பு தற்போது நடிகர் ஹர்மான் பவேஜா உடன் புதிய உறவை ஏற்படுத்தி கொண்டுள்ளார். அதை பகிரங்கமாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இதுவரையில் அவர் இந்த உறவை அப்பட்டமாக வெளியில் தெரிவிக்காத நிலையில் ஹர்மான் இந்த அழகுப் புயலுடன் காதலுற்று இருப்பதாக தெரிவித்திருந்தார். ஹர்மான் "எங்களுடைய குணாதிசியங்கள் ஒத்துப்போகின்றன.
இருவருமே குடும்பத்தினரையும்,நண்பர்களையும் மதிக்க கூடியவர்கள்.மிகவும் எளிமையான,நேர்மையான பெண் அவர்.சிறந்த அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்.உடல் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளில் இருவருமே ஒரே கருத்தை கொண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இதனைப் பற்றி பத்திரிக்கை சந்திப்பில் பிபாஷா விடம் கேட்டபோது புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.அதன் பின்னர் அவர் தான் ஒரு நல்ல துணைக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறி இருந்தார். ஆனால்,நேற்று இரவு அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ஹர்மானுக்கும்,தனக்கும் இடையிலான காதலை ஒத்துக்கொண்டுள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிபாஷா, "கடைசியில் நான் எனக்கான துணைவரை கண்டு கொண்டு விட்டேன்.ஆம்,நானும்,ஹர்மானும் இணையப் போவது உண்மைதான்.எனக்காக இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி"என கூறியுள்ளார்.
பத்திரிக்கை செய்திகளின் படி பிபாஷா வும்,ஹர்மானும் இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment