Loading...
Thursday 13 February 2014

ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த படமாக தேர்வாகிறது ஸ்லம்டாக் மில்லினியர்


கடந்த 64 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. அதாவது சினிமா கலைஞர்களின் நோபல் பரிசு.
ஆஸ்கர் விருது வழங்கி வரும் அமைப்பு கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது வென்ற படங்களிலேயே எந்த படம் சிறந்த படம் என்று ஒரு போட்டியை இணைய தளத்தில் அறிவித்து ரசிகர்களை ஓட்டளிக்க வைத்திருக்கிறது.

இந்த ஓட்டெடுப்பு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல்கட்ட வாக்கெடுப்பின் முடிவில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த படமாக ஸ்லம்டாக் மில்லினியர், நோ கண்ட்ரி பார் ஒல்டு மேன் என்ற இரண்டு படங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்தது.
இறுதியாக 48 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்லம்டாக் மில்லினியர் முதல் இடத்தை பிடித்துள்ளது. விரையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு துவங்க இருக்கிறது. அதிலும் ஸ்லம்டாக் மில்லியனிரே வெற்றி பெறும் என்கிறார்கள்.
2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினியர் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த எடிட்டிங், சிறந்த சிறப்பு சத்தம் என 7 விருதுகளை பெற்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும், இன்னொரு உயரம் காத்திருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP