Loading...
Monday 10 February 2014

ஹரி இயக்கத்தில் மீண்டும் விஷால்!



மிக விரைவாகவும், மிக மிகக் கமர்ஷியலாகவும், அதே சமயம் தொடர்ந்து வெற்றிப்படங்களையும் கொடுத்துவரும் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.
விஷால் தற்பொழுது இயக்குனர் திரு இயக்கத்தில், நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள்
நிறைவடைந்ததும் விஷால் – ஹரி படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன.

விஷால் – ஹரி கூட்டணியில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது நினைவிருக்கலாம். மீண்டும் அதே போன்றதொரு அட்டகாசமான கமர்ஷியல் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிங்கம்-2 படமும் பெரும் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP