Loading...
Monday 10 February 2014


மலையாள ரீமேக்கில் நடிக்கிறார் விக்ரம் பிரபு!


கடந்த 2012ல் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். கடந்த 2012ல் வெளியான மலையாளத் திரைப்படமான உஸ்தாத் ஹோட்டல் திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட இப்படம் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கினை கழுகு, சிவப்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ளார். இப்படத்தின் ஒரிஜினல் வெர்சனான மலையாளப்படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் திலகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பாரம்பரியமாக ஓட்டல் நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாக இப்படம் வெளியாகியிருந்தது. அஞ்சலி மேனனின் கதையை அன்வர் ரஷீத் இயக்கியிருந்தார்.
தமிழில் இப்படத்தினை ராதிகா சரத்குமார் தயாரிக்கவுள்ளார். துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் விக்ரம் பிரபுவும், திலகன் நடித்த வேடத்தில் ராஜ்கிரணும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழில் இப்படத்திற்கு தலப்பாக்கட்டை என்று பெயரிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP