Loading...
Monday 10 February 2014


சிம்பு – அனிருத் பாசமழை


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோ வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகவுள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியாவுடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். அனிருத் பாடிய பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகவும், இது போன்ற ஒரு நண்பன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக இருப்பதாகவும் சிம்பு டிவிட் செய்துள்ளார். இதற்கு அனிருத் “ காசு வரும் போகும், ஆனா நட்பு வருமா?” என்று பதிலளித்துள்ளார். பிரபலங்களின் இந்த நட்பினைப் பார்த்து ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் சிம்பு – அனிருத் இடையே சச்சரவுகள் இருப்பதாக வதந்திகள் இருந்ததாகவும், தற்பொழுது அந்த வதந்திகள் தவிடுபொடியாகியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். சமீபமாக சிம்பு – தனுஷ் ஆகியோரும் இதே போன்று பாசமழையைப் பொழிந்து கொண்டது நினைவிருக்கலாம். சிம்ப நடிப்பில் உருவாகிவரும் வாலு திரைப்படத்தின் ஆடியோவும், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வேலையில்லாப் பட்டதாரி படத்தின் ஆடியோவும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளன.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP