Loading...
Monday 10 February 2014

புதிய கெட்டப்பில் அஜித்!



ஆரம்ப காலங்களில் மிகவும் இளமையாக கல்லூரி மாணவர் போல இருந்த தல அஜித் திடீரென்று உடல் எடைபோட்டு குண்டாக இருந்தார் சண்டை காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சம்பந்தமான பிரச்சினைகள் காரணமாக அவரது உடலில் பல இடங்களில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்காக சாப்பிட்ட மாத்திரை மருந்துகளால் உடல் குண்டானது. அதன் பிறகு உடம்மை குறைத்தே தீருவது என்று கருதி ஒரு வருடம் கடுமையான உடற்பயிற்சி, டயட்டில் இருந்து உடம்மை குறைத்தார். திருப்பதி படத்தில் அவர் நடித்தபோது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்திருந்தார். அஜீத்தின் இந்த புதிய தோற்றம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே நார்மல் தோற்றத்துக்கு மீண்டும் வந்தார்.








அதன்பிறகு எந்த இமேஜும் பார்க்காமல்ஆங்காங்கே நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் அஜித். அதுவே அஜித்துக்கு அழகாக இருந்ததால் டைரக்டர் வெங்கட்பிரபு அவரை அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் நடிக்க வைத்தார். அதுவும் நெகட்டிவ் கேரக்டரில். அடுத்து ஆரம்பம் படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை பயன்படுத்திக் கொண்டார் விஷ்ணுவர்த்தன். இரண்டுமே ஹிட் என்பதால் அடுத்து வீரம் படத்திலும் அதே லுக்கில் வில்லேஜ் கெட்-அப்பாக மாற்றினார் சிவா.
அடுத்து அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில்.பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார். இந்த படத்திலும் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறாராம் இயக்குனர் . முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கை மாற்ற போகிறாராம் . இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேன்ன படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP