Loading...
Monday 10 February 2014


மகனுக்காக தாறுமாறாக பாடிய டி.ராஜேந்தர்!


மன்மதன் மற்றும் ஒஸ்தி படங்களில் மகன் சிம்புவுக்காக குத்து பாடல்களை பாடி அசத்திய டி.ஆர் அவர்கள் அதையடுத்து, இபபோது சிம்புவின் அடுத்த படமான வாலு படத்திலும் தமனின் இசையில் ஒரு பாடலை மகன் சிம்புவுக்காக பாடியிருக்கிறார். தாறுமாறு என தொடங்கும் அந்த பாடலை நிஜமாலுமே தாறுமாறாக பாடியிருக்கிறாராம் அவர். கூடவே அந்த பாடலில் சிம்புவும், ஹன்சிகாவும் நடிப்பதால், தனது பாணியில் டண்டனக்கா ரேஞ்சுக்கு பாடினாலும், மயிலிறகாய் மனசை தொடும் காதல் கவிநயத்துடனும் பாடியுள்ளாராம் டி.ஆர்., பாடலைக்கேட்ட சிம்பு, என் தந்தையின் பாடல்களுக்கு சின்ன வயதிலிருந்தே நான் ரசிகன். இப்படித்தான் என்று இல்லாமல் எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிப்பார்.
காதல், பாசம், சோகம் என அவரது படங்களில் சொல்லாத விசயங்களே இல்லை. அதனால், எனது படங்களிலும் அவரது இசைத்திறமையை அவ்வப்போது பயன்படுத்தி வருகிறேன்,. அப்படி எனக்காக அவர் பாடிய பாடல்கள் எல்லாமே மெகா ஹிட்தான். அதனால் வாலு படத்தில் அவர் எனக்காக பாடிய தாறுமாறு என்ற பாடல் தாறுமாறாக ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார் சிம்பு.

0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP